• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளவில்லா நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது: மம்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அளவில்லா நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது: மம்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

    மம்தா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடி நிலையில், தனது சொந்த தொகுதியான பவானிபூரில் போட்டியிட்டார்.

    தொடர்ந்து, பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிக்கு கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலேயே முன்னணியில் இருந்து வந்தார்.

    மொத்தமுள்ள 21 சுற்றுகளில் முடிவில் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றார்.

    கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பவானிபூர் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றதற்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள். இது, மேற்குவங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: