தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் விரைவில் பதவியேற்க வேண்டும் - ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து

ஜெகன்மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆந்திர பிரதேச மாநிலத்தின் இளம்வயது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். விழாவில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என வாழ்த்தினார்.

மக்களவைக்கான தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆந்திராவின் முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவியேற்றுக் கொண்டார். இதற்காக விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானம் பிரமாண்டமாகத் தயாரானது. ஆனால் நேற்றிரவு பெய்த மழையாலும், காற்றாலும் மைதானத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கடும் சேதமடைந்தன.

சேதமடைந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் அதிகாலை முதல் தீவிரப்படுத்தப்பட்டன. நண்பகலில் பதவியேற்பு விழா திட்டமிட்டபடி தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அணி அணியாக மைதானத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் அப்பகுதியே திருவிழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

விழா நடைபெற்ற மைதானத்துக்கு திறந்த வாகனத்தில் பவனியாக வந்த ஜெகன் மோகனுக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மைதானத்தில் சுமார் 40, 000 அதிகமானோர் திரண்டிருந்தனர்.

நண்பகல் 12 மணி 23 நிமிடங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியாகிய நான் என ஜெகன் மோகன் சொன்னதும், மக்களின் உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பால் இந்திராகாந்தி மைதானமே சில நிமிடங்களுக்கு அதிர்ந்து அடங்கியது.

ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஜெகன் மோகன், 1,000 ரூபாயாக இருந்த முதியோர் ஓய்வூதியத்தை 2, 250 ரூபாயாக உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த தொகை அடுத்த ஆண்டில் 2,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

விழாவில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சர் ஆவார் என கூறினார். மேலும் ஜெகன் மோகன் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் ஆந்திர மக்களுக்கு தெலுங்கு மொழியில் தனது வணக்கங்களை தெரிவித்து ஜெகன் மோகனை வாழ்த்தினார்.

ஸ்டாலின் - ஜெகன் மோகன் ரெட்டி


தொடர்ந்து தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ்வும், ஜெகன் மோகனை வாழ்த்தி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் பதவியேற்பு விழாவுக்கு தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

அனைத்து மதத்தலைவர்களின் வழிபாட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து விழா முடிவுக்கு வந்தது. விழாவில் ஜெகன்மோகன் தவிர்த்து வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவை உறுப்பினர்கள் ஜுன் 7-ம் தேதி பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... சுத்தியல் தவறிதான் விழுந்ததா? நேசமணி குறித்து கிசுணமூர்த்தியின் நேர்காணல்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: