• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

#MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா

எம்.ஜே.அக்பர்

எம்.ஜே.அக்பர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மீ டூ (#MeToo) விவகாரத்தில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    அமைச்சராவதற்கு முன் எம்.ஜே.அக்பர் பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். மீ டூ விவகாரம், இந்தியாவில் பூதாகரமாகி வரும் நிலையில், அக்பருடன் பணியாற்றிய 20-க்கும் அதிகமான பெண் பத்திரிகையாளர்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நைஜிரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அக்பர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு கடந்த வாரம் டெல்லி திரும்பினார்.

    இதனிடையே, அக்பர் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். எனினும் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், தனக்கு எதிராக புகாரளித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்பர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக, அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் சந்திக்கவுள்ளேன். எனவே, அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மத்திய அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்தற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்‘’ என்று எம்.ஜே.அக்பர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, தன் மீது புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர்கள்  மீது எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளநிலையில் அக்பர் தமது பதவியை  ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: