முகப்பு /செய்தி /இந்தியா / மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சர் மகள்.. வீடியோ வைரல்.. மிசோராமில் சம்பவம்

மருத்துவரை சரமாரியாக தாக்கிய முதலமைச்சர் மகள்.. வீடியோ வைரல்.. மிசோராமில் சம்பவம்

மருத்துவரை தாக்கிய மிசோரம் முதலமைச்சரின் மகள்

மருத்துவரை தாக்கிய மிசோரம் முதலமைச்சரின் மகள்

Mizoram CM daughter: தனது மகளின் செயலுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன், அவரின் இந்த செயலை நான் எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன் என்று முதலமைச்சர் தனது மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mizoram, India

முறையாக அப்பாயின்ட்மென்ட் வாங்காததால் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை மிசோரம் மாநில முதலமைச்சரின் மகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநில முதலமைச்சராக ஜோரம் தங்கா உள்ளார். முதலமைச்சர் மகள் மிலாரி சாங்டே தலைநகர் அய்ஸ்வாலில் உள்ள மருத்துவமனையில் தனது சரும நோய் பிரச்சனைக்காக மருத்துவரைப் பார்க்க சென்றுள்ளார்.

மிலாரி மருத்துவரிடம் சென்ற போது உரிய அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் வருவது முறையல்ல, எனவே அப்பாயின்ட் வாங்கிவிட்டு வாருங்கள் என மருத்துவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முதலமைச்சரின் மகள் மிலாரி மருத்துவரின் கேபினுக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கியுள்ளார். மருத்துவரை முதலமைச்சரின் மகள் தாக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

மிலாரியின் இந்த செயலை கண்டித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பின் மிசோரம் பிரிவு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மிசோரம் முதலமைச்சர் ஜோரம் தங்கா தனது மகளின் செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.  “எனது மகளின் செயலுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன், அவரின் இந்த செயலை நான் எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன்” என்று முதலமைச்சர் தனது மன்னிப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு வேலைக்கான தேர்வு முறைகேட்டை தடுக்க அசாம் அரசு புது யுக்தி!

அதேவேளை, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மிலாரி மீது இதுவரை சட்ட ரீதியான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

First published:

Tags: Mizoram, Video gets viral