கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்படுத்துவது கொரோனாவுக்கு எதிராக நல்ல பலனை கொடுப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் மெல்ல அதிகரித்து வருகிறது. 3வது அலை தாக்கக் கூடும் என்ற கருத்து நிலவிவரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை செலுத்தும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. இதுவரை 50 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒருசில இடங்களில் முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது டோஸ் வேறு ஒரு தடுப்பூசியும் செலுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் அண்மையில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் பங்கேற்ற 18 பேருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் தங்கம்- பரிசு மழையில் நனையும் நிரஜ் சோப்ரா!
இதில், ஒரே வகை தடுப்புமருந்தை இரண்டு முறை செலுத்திக்கொண்டவர்களை விட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசியையும் ஒருமுறை செலுத்துக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆல்பா, பீட்டா, டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக இவ்வாறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது நன்றாக செயலாற்றுவதாகவும் பாதுகாப்பானது எனவும் சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த சோதனையின் முடிவு இன்னும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தொழிலாளர்களின் பி.எஃப் பணம் ரூ.37 கோடி கொள்ளை: அதிகாரிகள் 4 பேர் கைது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.