பிரதமர் மோடியின் ‘மிஷன் சக்தி’ அறிவிப்பில் அறிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள்!

மிஷன் சக்தி மூலம் விண்வெளியில் நமது நாட்டுக்கு சூப்பர் பவர் கிடைத்துள்ளது. உலகில் இந்த சக்தியைப் பெறும் நான்காம் நாடாக நாம் உள்ளோம்.

Web Desk | news18
Updated: March 27, 2019, 6:58 PM IST
பிரதமர் மோடியின் ‘மிஷன் சக்தி’ அறிவிப்பில் அறிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள்!
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: March 27, 2019, 6:58 PM IST
ஏவுகணை எதிர்த்தாக்குதல்களை சமாளிக்கும் திறன் உடைய ASAT இன்ரு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். மேலும், சர்வதேச அளவில் இம்முயற்சி எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் மோடி தெளிவுபடுத்தினார்.

மிஷன் சக்தி ஆபரேஷன் மிகவும் கடினமான சாதனை என்று பெருமைகொண்ட மோடி இந்தியா சூப்பர் விண்வெளி சக்தியைப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார். பிரதமர் மோடியின் அறிவிப்பில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்:

1. இன்று இந்தியாவிடம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வானிலை எனப் பல துறைகள் சார்ந்தும் செயற்கைக்கோள்கள் உள்ளன.

2. இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கான முக்கியமான படி தான் ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன்.

3. விண்வெளியில் சக்தி மிகுந்த சாதனையை இந்தியா இன்று மார்ச் 27-ம் தேதி படைத்துள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் 3 நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த நான்காம் நாடு இந்தியா.

4. இந்தியாவின் இப்புதிய ஏவுகணை சாதனை இந்தியாவுக்குப் புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இது முற்றிலும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அன்றி வேறு யாருக்கு எதிராகவும் உபயோகப்படுத்த அல்ல.

5. இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் ஒப்பந்தங்களையும் மீறிய செயல் அல்ல
Loading...
6. ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும் பெருமைமிகு நிகழ்வுகள் நடக்கும். அது காலத்துக்கும் வரும் தலைமுறையினருக்கும் வரலாற்றுச் சான்றாக நிற்கும். அத்தகைய நாள் தான் இன்று.

7. எதிரிகளின் விண்வெளித் தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் திறன் கொண்டது ASAT ஏவுகணை. மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் இது பெருமை.

8. மிஷன் சக்தி மிகவும் கடினமான சவால். மிகவும் துல்லியமாக அதிவேகத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இது இந்தியவின் பெருமைமிகு அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நமது விண்வெளி திட்டங்களின் திறனைக் காட்டுகிறது.

9. மிஷன் சக்தி மூலம் விண்வெளியில் நமது நாட்டுக்கு சூப்பர் பவர் கிடைத்துள்ளது. உலகில் இந்த சக்தியைப் பெறும் நான்காம் நாடாக நாம் உள்ளோம்.

10. இந்த முயற்சி முற்றிலும் உள்நாட்டிலேயே விளைந்ததாகும்.

Also See...

 

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626