இந்தியப் பாதுகாப்பு மேம்பாட்டை ‘மிஷன் சக்தி’ உறுதி செய்துள்ளது- மோடி

”மிஷன் சக்தி மூலம் இந்தியா புதிய சாதனையைப் படைத்து விண்வெளியில் ஒரு சூப்பர் பவர் தேசமாக உயர்ந்துள்ளது”.

 • | June 24, 2019, 17:51 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 3 YEARS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  12:56 (IST)

  ’இந்தியாவின் இப்புதிய ஏவுகணை சாதனை இந்தியாவுக்குப் புதிய பலத்தைக் கொடுத்துள்ளது. இது முற்றிலும் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அன்றி வேறு யாருக்கு எதிராகௌம் இந்தத் திறனை தேவையில்லாமல் நாங்கள் பயன்படுத்தமாட்டோம் என சர்வதேச மக்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளியிலும் ஆயுதங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். இது எந்த சர்வதேச சட்டநடைமுறைகளையும் மீறிய செயல் அல்ல’ - மோடி

  12:52 (IST)

  'மிஷன் சக்தி மிகவும் கடினமான சவால். மிகவும் துல்லியமாக அதிவேகத்தில் இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இது இந்தியவின் பெருமைமிகு அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நமது விண்வெளி திட்டங்களின் திறனைக் காட்டுகிறது’ என இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

  12:47 (IST)

  ’ஒவ்வொரு நாட்டின் பயணத்திலும் பெருமைமிகு நிகழ்வுகள் நடக்கும். அது காலத்துக்கும் வரும் தலைமுறையினருக்கும் வரலாற்றுச் சான்றாக நிற்கும். அத்தகைய நாள் தான் இன்று. எதிரிகளின் விண்வெளித் தாக்குதல்களை எதிர்த்து நிற்கும் திறன் கொண்டது ASAT ஏவுகணை. மிஷன் சக்தியில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்’ - ட்விட்டரில் பிரதமர் மோடி

  12:43 (IST)

  ‘விண்வெளியில் சக்தி மிகுந்த சாதனையை இந்தியா இன்று மார்ச் 27-ம் தேதி படைத்துள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் 3 நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த நான்காம் நாடு இந்தியா’

  12:37 (IST)

  ”இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் அமைந்துள்ளது” - பிரதமர் மோடி

  12:36 (IST)

  ‘எதிர்ப்புச் செயற்கைக்கோள் ஆயுதமான A-SAT, வட்டக் குறுக்களவு கொண்ட கோளப்பாதையில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது’ - பிரதமர் மோடி

  12:32 (IST)

  ‘இன்று நம்மிடம் பல்வேறு துறைகளுக்கும் தேவையான விண்வெளி செயற்கைக்கோள்கள் உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வானிலை எனப் பலவற்றுக்காகவும்...’- பிரதமர் மோடி

  12:29 (IST)

  இந்தியா புதிய விண்வெளிச் சாதனையைப் படைத்துள்ளது. ’மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் என்பது மிகக் கடினமானப் பணியாக இருந்தது. ஆனால், இன்று ஏவப்பட்ட மூன்று நிமிடங்களில் ‘மிஷன் சக்தி’ புதிய சாதனை படைத்துள்ளது.

  11:50 (IST)

  முக்கியமான நேரத்தில் மட்டுமே நாட்டு மக்களிடம் பிரதமர் இதுபோன்று நேரடியாக உரையாற்றுவார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  11:45 (IST)

  இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்