Home » News » National » MISSION PANNI A VILLAGE IN CHHATTISGARH THERE IS NO WATER SHORTAGE DUE TO PROPER WATER MANAGEMENT PLAN VAIJ

வீட்டுக்கு வீடு மழை நீர் சேமிப்பு... தண்ணீர் பஞ்சத்தை பார்த்ததே இல்லை என்று கூறும் கிராமவாசிகள்...!

நீர் மேலாண்மை குறித்து நாட்டிற்கே பாடம் எடுக்கும் வகையில் சத்தீஸ்கரில் உள்ள இந்த கிராமம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு அடைந்துள்ளது.

வீட்டுக்கு வீடு மழை நீர் சேமிப்பு... தண்ணீர் பஞ்சத்தை பார்த்ததே இல்லை என்று கூறும் கிராமவாசிகள்...!
வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும் கிராமம்
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:42 PM IST
  • Share this:
நாடு தழுவிய அளவில் தண்ணீர் பஞ்சம் நிலவும் நிலையில், சத்தீஸ்கரில் உள்ள கிராமம் ஒன்று 50 ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக்கொண்டு நீர் மேலாண்மையில் அசத்தி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வறட்சியால் பொதுமக்கள் தண்ணீரைத் தேடி அலையும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீர் மேலாண்மையில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் 21 நகரங்களில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என திட்டக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் தாம்தாரி மாவட்டத்தில் உள்ள பட்காவோன் கிராமத்தில் எந்தக்  காலத்திலும் எளிதில் தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 முதல் 12 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கும் அதிர்ஷ்டக்கார கிராமமாக பட்காவோன் கிராமம் உள்ளது.


சத்திஸ்கரில் உள்ள பட்காவோன் கிராமம்


மேலும் இந்த கிராம மக்கள் நினைவு தெரிந்த நாள் முதலாக, தண்ணீர் பஞ்சத்தை கண்டதேயில்லை என்று கூறுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாகவே நீர் மேலாண்மையில் இக்கிராம மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இப்பகுதி முதியவர்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் மூலம், ஒவ்வொரு வீட்டிலும் கிணறுகளை அமைத்து மழை நீரை சேமிக்கின்றனர். 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. இதன்மூலம், முன்மாதிரி கிராமமாக பட்காவோன் திகழ்ந்து வருகிறது.நீர் மேலாண்மை குறித்து நாட்டிற்கே பாடம் எடுக்கும் வகையில் இக்கிராமம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு அடைந்துள்ளது. தண்ணீர் பஞ்சம் அதன் கோர முகத்தை முழுமையாக காட்டுவதற்குள் நாடு முழுவதும் உள்ள மக்கள் விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

மேலும் படிக்க... தண்ணீர் சினிமா... தண்ணீர் பஞ்சத்தை திரை முன் கொண்டு வந்த விஜய்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading