இளைஞர்கள் தண்ணீர் பாதுகாப்பை சமூகக் கடமையாகக் கொள்ளவேண்டும்: மிஷன் பானி நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

வெங்கைய நாயுடு

தண்ணீர் பாதுகாப்பை தங்களது முக்கிய சமூகக் கடமையாக இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நியூஸ்18 குழுமத்தின் மிஷன் பானி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக தண்ணீர் பாதுகாப்பு மற்றும் கொரோனா காலத்தில் நிலையான சுகாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பேசினார்.

  அப்போது அவர், ‘உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், இந்தியாவில் 4 சதவீத புதுப்பிக்கத்தக்க நீர்ஆதாரங்கள் மட்டுமே உள்ளது. காலநிலை மாற்றத்தின் பாதிப்பை இந்தியா எதிர்கொள்ளும் இந்த காலத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு புது கட்டிடங்களுக்கும் மழை நீர் சேகரிப்பு என்பது கட்டாயம் தேவை.

  தூய்மை இந்தியா திட்டம் எப்படி ஒரு மிகப்பெரிய இயக்கமாக மாறியதோ? அதேபோல, தண்ணீர் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய இயக்கமாக மாறவேண்டும். உலகத்திலுள்ள தண்ணீர் 3 சதவீத தண்ணீர் மட்டுமே நன்ணீராக உள்ளது. அதில், 0.5 சதவீதம் மட்டுமே குடிப்பதற்கு கிடைக்கும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: