HOME»NEWS»NATIONAL»mission paani tribal man leads un project to preserve meghalayan forest in east khasi hills vin ghta

மிஷன் பாணி - மேகாலயா வன அழிப்பைத் தடுக்க களமிறங்கியுள்ள 'ஒன்மேன்'!

பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களை வறுமையில் இருந்து மீட்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளையும் தாங்கள் செய்து வருவதாக பா-தாம்போர் கூறினார்.

மிஷன் பாணி - மேகாலயா வன அழிப்பைத் தடுக்க களமிறங்கியுள்ள 'ஒன்மேன்'!
பா - தாம்போர்
  • News18
  • Last Updated :
  • Share this:

மேகாலயா வனப்பகுதி எதிர்கொண்டுள்ள வன அழிப்பைத் தடுக்க ஐ.நா நிதியுதவியுடன் பா-தம்போர்-லிங்டோ (Bah Tambor) என்பவர் ஒற்றை ஆளாக போராடி வருகிறார்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பசுமை போர்த்திய புல்தரைகள், அழகான பறவைகள், விலங்குகள், உயரமான மரங்கள், பாயும் நதி என்றால் நம் கற்பனை சிறகுகளுக்குள் உடனடியாக அமேசான் காடுகள் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு அமேசான் காடுகளைப் பற்றி அறிந்திருக்கும் நாம், அதற்கு இணையாக நம் நாட்டில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களைப் பற்றி தெரிந்திருப்பதில்லை. குறிப்பாக, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைப் பற்றி தெரிவதில்லை. 

அங்கு இருக்கும் மலைகள், காடுகள், சமவெளிகள் ஆகியவை அமேசான் காடுகளுக்கு இணையாக இருக்கின்றன. வனப்பகுதிகளின் பாதுகாவலர்களாக கருதப்படும் பூர்வக்குடி பழங்குடிகள் இந்த மாநிலங்களில் அதிகம் வாழ்கின்றனர்.



ஆனால், இந்த மாநிலங்களும் நகரமயமாக்கல், தொழில்வளர்ச்சி, வன அழிப்பு ஆகியவை பிரச்சனைகளை வேகமாக எதிர்கொண்டு வருகிறது. அந்த மாநிலங்களின் அடையாளமாக இருக்கும் இயற்கைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் லிங்டோ (Lyngdoh), பிளா (Blah) பழங்குடிகள் அதிகளவு வசித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் வன அழிப்பு ஏற்பட்டு வருவதை உணர்ந்த லிங்டோ பழங்குடி இனத்தைச் சேர்ந்த பா-தாம்போர்-லிங்டோ (Bah Tambor Lyngdoh) என்பவர் ஒற்றை மனிதராக, அந்த வன அழிப்பைத் தடுக்க போராடி வருகிறார். 

மாவ்ப்லாங் (Mawphlang) கிராமத்தில் வசித்து வரும் அவர், ஐ.நாவின் REDD+ ( United Nations Reducing Emissions from Deforestation and Forest Degradation) திட்டத்தில் இணைந்து கிழக்கு காசி மலைத்தொடர்களில் இருக்கும் 27,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகளை பாதுகாக்க முயற்சிகளை எடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மனிதர்களால் ஏற்படும் வன அழிப்பை தடுப்பது தன்னுடைய முதல் நோக்கம் எனக் கூறியுள்ளார். மாவ்பிலாங்க் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்படுவதை தான் உணர்ந்ததாகவும், அப்போது இருந்து இதனை தடுப்பதற்காக முயற்சிகளை தொடங்கியதாகவும் பா-தம்போர் தெரிவித்தார். 

வன அழிப்பு என்பது நிலத்தை மற்றும் அழிப்பது அல்ல எனக் கூறிய அவர், வனம் அழிக்கப்படுவதால் விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்வியலுக்கும் ஆபத்து ஏற்படுவதாக கூறினார். இதனால், காடுகளின் அடையாளமான பல்லுரியர் பெருக்கமும் பாதிக்கப்படுவதாக பா-தாம்போர் அடிக்கோடிட்டு தெரிவித்துள்ளார். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த இந்தப் பகுதிகளில் காடுகளும், நிலங்களும் எப்படி இருந்தது என்பதை அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம் என கூறியுள்ள 

பா-தாம்போர், அவை எங்கள் கண்முன்னே மாற்றமடைவது அதிர்ச்சியாக இருப்பதாக கூறினார். அத்தகைய மாற்றம் நிச்சயம் இயற்கையின் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Also read... JCB -க்குள் சிக்கிக்கொண்ட 2 மலைப்பாம்புகள் - 4 மணி நேரம் போராடி மீட்ட வனத்துறை!

ஐ.நாவின் REDD+ திட்டத்தின்கீழ் ‘Ka Synjuk Ki Hima Arliang Wah Umiam-Mawphlang Welfare Society என தங்களின் அமைப்பின் பெயரை பதிவு செய்துள்ளதாக பா-தாம்போர் தெரிவித்துள்ளார். பாரம்பரியத்தை பாதுகாக்கும் 10 திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப தங்களின் அமைப்பு செயல்படுவதாகவும் கூறினார்.  River Umiam Sub-Watershed Welfare Society -ன் கீழ் காசி மலைப்பகுதியில் அமைந்துள்ள 62 கிராமங்களில் இருக்கும் நீர்தேக்க பகுதிகளை கண்டறிந்து அவற்றை முறைப்படுத்தி, பாதுகாக்கப்படுவதாகவும், இதன்மூலம் காடுகள் அழிப்பு தடுக்கப்படுவதாகவும் பா-தாம்போர் கூறினார். 

வனப்பகுதியை பாதுகாக்க தொழில்நுட்ப உதவிகளையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். மேலும், பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்களை வறுமையில் இருந்து மீட்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளையும் தாங்கள் செய்து வருவதாக பா-தாம்போர் கூறினார். ஐ.நா திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் தொழில்களை ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மற்ற தொண்டு நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான நிதியுதவியை அளித்து வருவதாக பா-தாம்போர் கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: