நீர் ஆராதரங்கள் மற்றும் ஆறுகள் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஜல் சக்தி என்ற புதிய அமைச்சகம் கடந்த 2019-ல் நிறுவப்பட்டது. நாடு எதிர்கொள்ளும் நீர் சார்ந்த சவால்களுக்கு உரிய தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை ஜல் சக்தி முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலக கழிவறை தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், ஆரோக்கியமான மற்றும் தூய்மையான இந்தியாவுக்காக நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை நோக்கி செயல்படுவதில் நாட்டு மக்கள் அனைவரும் தீவிரமாக பங்கேற்க ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக கழிப்பறை தின நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Mission Paani World Toilet Day நிகழ்வில் பங்கேற்று பேசிய கஜேந்திர சிங் ஷெகாவத், திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையே இல்லாத (ODF) ஸ்டேட்டஸை அடைய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் பிரதமரின் ஜல் சக்தி அபியான் மற்றும் மிஷன் பானிக்கு ஆதரவளிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது மிக முக்கியம் என்றார்.
இதனிடையே இந்த நிகழ்வில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், உலக கழிப்பறை அமைப்பின் (WTO) நிறுவனர் அக்ஷய் குமார், ஜாக் சிம், சுகாதார ஆர்வலர் பிந்தேஷ்வர் பதக் போன்ற பல குறிப்பிடத்தக்க நபர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ஓம் பிர்லா, சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான அரசின்மு யற்சிகளில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.
சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகள் ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றார். சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்படும் கிராமங்களில் உள்ள பெண்களின் அவலநிலையை பற்றியும் பேசிய ஓம் பிர்லா, நெருக்கடியை தீர்க்க பிரதமர் கமிட்டிகளை தொடக்கி இருப்பதாக கூறினார். மிஷன் பானியின் தூதரான நடிகர் அக்ஷய் குமார் பேசுகையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுத்தமான தண்ணீர் மற்றும் சரியான கழிப்பறை இல்லாததால் பெண்கள் பாதிக்கப்படும் பல பகுதிகள் இன்னும் உள்ளன.
எனவே நமக்கு கிடைத்திருக்கும் இந்த வசதிகளை நம் அருகில் உள்ளோர் மற்றும் சமூகத்திற்கு வழங்க ஒவ்வொரு குடிமகனும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மிஷன் பானி என்பது தூய்மையான இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு படி என்று Reckitt நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் கௌரவ் ஜெயின் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் கையால் துப்புரவு செய்யும் முறை பற்றிய அபாயம் குறித்தும் இவர் பேசினார்.
நிகழ்வில் ராஜ்யசபா துணைத் தலைர் ஹரிவன்ஷ் நாராயண் பேசுகையில், "மிஷன் பானி போன்ற திட்டங்களை வெற்றியடைய ஒவ்வொரு தனிநபரும் தங்கள் பங்களிப்பை தருவது அவசியம் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து குழு விவாதத்தின் போது பேசிய பிந்தேஷ்வர் பதக், சமூக தீண்டாமை பிரச்சனையை எழுப்பினார். பண்டைய காலத்தில் அரசர்கள் மற்றும் ராணிகள் மட்டுமே மூடிய அறையில் மலம் கழித்தனர், மற்றவர்கள் திறந்த வெளியை பயன்படுத்தியதை பற்றியும், கழிவறையை சுத்தம் செய்தவர்கள் சமூக தீண்டாமை பிரச்சனைகளை எதிர்கொண்டது பற்றியும் விரிவாக பேசினார்.
WTO நிறுவனர் ஜாக் சிம், சிறப்பு கழிப்பறை கல்லூரிகளில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி பேசினார். வேலை இல்லாமல் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தொழில்முறை துப்புரவு பணியாளர்களாக (professional sanitation workers) மாறியுள்ளனர் என்றார். இதை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் நாட்டின் சுகாதார நிலையை மாற்ற கடுமையாக பாடுபட்டு வரும் நபர்களின் கதைகளின் தொகுப்பான ‘101 ஸ்டோரீஸ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்’ வெளியிடப்பட்டது.
Also read... KFC பேக்குகள் பயன்படுத்தி புதிய ஃபேஷன் - தென்னாப்பிரிக்கா ஆடை வடிவமைப்பாளர்!
அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான இந்தியாவின் முயற்சியை நிலைநிறுத்துவதற்கான உறுதிமொழியை மிஷன் பானி முன்னெடுத்தது. இதனிடையே பாட்டியாலாவில் உள்ள உலக கழிப்பறை கல்லூரியில் பயிற்சி பெறும் துப்புரவு பணியாளர்கள் ‘அனைவருக்கும் சுகாதாரம்’ உறுதிமொழி எடுத்தனர். ‘அனைவருக்கும் சுகாதாரம்’ உறுதிமொழி பற்றி பேசிய பரமார்த் நிகேதன் ஆசிரம தலைவர் சுவாமி சிதானந்த சரஸ்வதி “நாங்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளோம், பல கோயில்களைக் கட்டத் தூண்டியுள்ளோம், இப்போது இன்னும் பல கழிப்பறைகள் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறி இருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani