முகப்பு /செய்தி /இந்தியா / மிஷன் பாணி - வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

மிஷன் பாணி - வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

மாதிரி படம்

மாதிரி படம்

தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்தினாலே தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து ஓரளவேனும் மீள வாய்ப்புகள் உள்ளன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

இயற்கை கொடுத்த கொடைகளுள் ஒன்றான தண்ணீரை முறையாக பயன்படுத்தாமல் அல்லது சேமிக்காமல் விட்டதன் விளைவு, இன்று உலகில் உள்ள பல நகரங்களில் தண்ணீர் பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளன. இந்தியாவிலும் அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் வேகமாக முன்னேறி சென்றுகொண்டிருக்கின்றன. கோடைகாலங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையை நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. இவ்வற்றுக்கெல்லாம் முழுமுதற் காரணம் ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவைகளை முறையாக பராமரிக்காமல் ஆக்கிரமிப்பு செய்ததன் விளைவு தான்.

பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீரில் 97.5 விழுக்காடு நீர் பெருங்கடல்களில் மட்டுமே உள்ளது. எஞ்சியுள்ள 2.5 விழுக்காடு நீர், பனிக்கட்டிகளாக இருந்து கரைந்து வருகின்றன. நிலத்தடி நீரைப் பொறுத்தவரையில் மிக மிக சொற்ப விழுக்காடு மட்டுமே எஞ்சியிருக்கிறது. பல நகரங்களில் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு சென்றுள்ளதையும் நாம் அறிவோம். உணவு முதல் உடை வரை அனைத்து பொருட்களையும் உருவாக்குவதற்கு மூலாதாரமாக உள்ள நீரை அனைவரும் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு அடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தண்ணீர் சேமிப்பை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்தினாலே தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து ஓரளவேனும் மீள வாய்ப்புகள் உள்ளன.

தண்ணீரை வீட்டில் எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்;

1. பல் துலக்கும்போது குழாயை அநாவசியமாக திறந்துவிடாமல், தேவையான சமயத்தில் மட்டும் தண்ணீரை பயன்படுத்தலாம்.

2. பாத்திரம் கழுவும்போது அதிகளவு நீரை உபயோக்கிறோம், அப்போது, தண்ணீரை குறைந்தளவு பயன்படுத்தி சேமிக்கலாம்.

3. வாஷிங் மெஷினை அடிக்கடி பயன்படுத்தாமல், அதிக துணி இருக்கும்போது மட்டும் பயன்படுத்தினால் மின்சாரத்தையும் சேர்ந்து மிச்சப்படுத்தலாம்.

4. குளிக்கும்போதும், உடலுக்கு சோப்பிடும்போதும் பலர் ஷவர் அல்லது குழாயை திறந்து விட்டுக்கொண்டே குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனை தவிர்க்கலாம்

5. செடிகளுக்கு தண்ணீர் விடும்போது, கேன்களில் நிரப்பி தேவையான அளவு மட்டும் தண்ணீர் விடலாம்.

6. வீட்டு குழாய்களில் தண்ணீர் கசிவு இருந்தால், அதனை அப்படியே விட்டுவிடாமல் உடனடியாக சரிசெய்வதுகூட தண்ணீர் சேமிப்பில் அடங்கும்.

7. கால்வாய்களில் அதிகளவிலான தண்ணீரை வீணாக திறந்துவிட வேண்டாம்.

8. தண்ணீரை சரியான அளவு மட்டும் வரும் வகையிலான கருவிகளை குழாய்களில் பொருத்தலாம்.

Also read... பெருமளவு பயிர் இழப்பை ஏற்படுத்தும் விகிதத்தில் உலகம் வெப்பமடைந்து வருகிறது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இதுபோன்ற இன்னும் பல விஷயங்கள், தண்ணீர் சேமிப்பில் உள்ளன. தண்ணீர் சேமிப்பு என்பது ஒருவர் அல்லது ஒரு குழு ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கக்கூடிய விஷயமல்ல என்பதை உணருங்கள். ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து தண்ணீர் சேமிப்பில் பயணித்தால் மட்டுமே எஞ்சியிருக்கும் சிறிதளவு நீராவது அடுத்த தலைமுறையினருக்கு மிச்சமிருக்கும்.

சேர்ந்து பயணிப்போம், தண்ணீரை சேமிப்போம். ஹார்பிக் - நியூஸ் 18 மிஷன் பாணியில் இணைந்து தண்ணீர் சேமிப்பை செயல்படுத்துவோம்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Mission Paani