• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Mission 2024: சரத்பவார் தலைமையில் காங்கிரஸ் இல்லா கட்சித் தலைவர்கள் கூட்டம்! - பிரசாந்த் கிஷோரின் திட்டம் தான் என்ன?

Mission 2024: சரத்பவார் தலைமையில் காங்கிரஸ் இல்லா கட்சித் தலைவர்கள் கூட்டம்! - பிரசாந்த் கிஷோரின் திட்டம் தான் என்ன?

பிரசாந்த் கிஷோர் - சரத்பவார்

பிரசாந்த் கிஷோர் - சரத்பவார்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக எதிர்கட்சிகளை அணி திரட்டும் அசைன்மெண்ட் பிரசாந்த் கிஷோருக்கு வழங்கப்பட்டிருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

  • Share this:
காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இல்லாத எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை சரத் பவார் தலைமையில் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் வியூக நிபுணராண பிரசாந்த் கிஷோரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், டெல்லியில் இன்று 2வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்குள் இருவருக்குமிடையேயான இரண்டாவது சந்திப்பு இதுவென்பதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தல்களில் மேற்குவங்கத்தில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்காகவும், தமிழகத்தில் திமுகவுக்காகவும் தேர்தல் வியூகங்களை வகுத்து தந்து அரசியல் சாணக்கியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் பிரசாந்த் கிஷோர். அவர் சொன்னது போலவே மேற்குவங்கத்தில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் வெளியான நிலையில் பாஜக அதிகபட்சமாக கூறுவதென்றால் 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது எனவும் அப்படி வெற்றி பெற்றால் தான் இந்த தொழிலில் இருந்தே வெளியேறிவிடுவதாகவும் சவால் விடுத்து அதில் வெற்றி பெற்றவர் பிரசாந்த் கிஷோர்.

Also Read:  கர்ப்பிணி ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

இவ்விரு தேர்தலுக்கு பின்னர் பிரசாந்த் கிஷோர் தொழிலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த போதிலும் தற்போது அவரின் கவனம் தேசிய அரசியலின் மீது பாய்ந்திருப்பதாக கருதப்படுகிறது.

அதற்கேற்றார் போல கடந்த ஜூன் 11ம் தேதி பிரதான எதிர்கட்சிகளுள் ஒன்றான தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவாருடன் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக எதிர்கட்சிகளை அணி திரட்டும் அசைன்மெண்ட் பிரசாந்த் கிஷோருக்கு வழங்கப்பட்டிருப்பதாக பரவலாக பேசப்பட்டது.

Also Read:   2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

இந்த நிலையில் தற்போது சரத் பவாரை மீண்டும் ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர். இருவருக்குமிடையிலான சந்திப்பு டெல்லியில் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் இல்லாத 3வது அணியை மையமாக கொண்டு காய் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரத் பவாரின் தலைமையில் நாளை எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அதே நேரத்தில் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கல்தா கொடுக்கப்படுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கூட்டம் 3வது கூட்டணிக்கு அச்சாரமிடும் வகையில் இருக்கும் எனவும், பாஜகவின் நரேந்திர மோடிக்கு எதிராக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: