ஹோம் /நியூஸ் /இந்தியா /

15 வயதை தாண்டிய இஸ்லாமிய பெண்ணின் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

15 வயதை தாண்டிய இஸ்லாமிய பெண்ணின் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாமிய பெண்கள் திருமணம்

இஸ்லாமிய பெண்கள் திருமணம்

இஸ்லாமிய சட்டத்தின் படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Punjab, India

  15 வயதுக்கு மேற்பட்ட மைனர் இஸ்லாமிய பெண்கள், விருப்பமான நபரை திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் திருமணச் சட்டத்தின்கீழ் வராது என பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜாவித் என்ற 21 வயது இளைஞர் 16 வயது முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டதோடு, அவரது மனைவியும் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, குழந்தை திருமண தடைச் சட்டத்தின்கீழ், தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவும், தனது மனைவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரியும் ஜாவித் வழக்கு தொடர்ந்தார்.

  அதை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி விகாஸ் பால், இஸ்லாமிய சட்டத்தின் படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார். மேலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கூட திருமணம் நடைபெறலாம் என கூறிய அவர், திருமணத்தை பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டதால் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்த முகாந்திரம் இல்லை எனக் கூறி, ஜாவித் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி விகாஸ் பால் தீர்ப்பளித்தார்.

  இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அவமானத்துக்கு பயந்து வீட்டை விட்டு துரத்திய குடும்பம் - ராஜஸ்தானில் அவலம்

  நாட்டில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது என பொதுச் சட்டம் உள்ளது. அதேவேளை, இஸ்லாமிய தனிநபர் சட்டங்களில் அடிப்படையில் செல்லும் என்ற இந்த தீர்ப்பு கவனத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே, இதேபோல் 18 வயதுக்கு குறைவான இஸ்லாமிய பெண் திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என்ற வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: High court, Marriage, Muslim