• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு மொட்டையடித்த கிராம பஞ்சாயத்து! பீகாரில் கொடூரம்

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு மொட்டையடித்த கிராம பஞ்சாயத்து! பீகாரில் கொடூரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வலிமைபடைத்தவர்களாக இருந்தநிலையில், பஞ்சாயத்து சிறுமிக்கு தண்டனை அளித்துள்ளது. சிறுமிக்கு மொட்டையடிக்கப்பட்டு கிராமத்தைச் சுற்றிவரச் செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பீகார் மாநிலம் காயா மாவட்டத்தைச் சிறுமியை கடத்திச் சென்று ஒரு கும்பல் மீண்டும் மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர், அந்தச் சிறுமிக்கு மொட்டையடித்து ஊரைச் சுற்றி ஊர்வலமாக வரச் சொல்லி தண்டனை அளித்த கொடூரமும் அரங்கேறியுள்ளது.

    பீகாரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், ‘ஆகஸ்ட் 14-ம் தேதி மாலையில் சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, அவரை ஒரு கும்பல் வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளது.

    அந்தச் சிறுமி, பஞ்சாயத்து அலுவலகத்தின் மாடிக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார். அங்கே வைத்து அந்த கும்பல் தொடர்ச்சியாக சிறுமி மயக்கமடையும் வரை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அடுத்தநாள், காலையில் சிறுமி மயங்கி கிடப்பது ஊர்காரர்களுக்கு தெரியவந்துள்ளது. பின்னர், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கிராமப் பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது.

    குற்றம்சாட்டப்பட்டவர்கள் வலிமைபடைத்தவர்களாக இருந்தநிலையில், சிறுமிக்கு தண்டனை அளித்துள்ளது பஞ்சாயத்து . சிறுமிக்கு மொட்டையடிக்கப்பட்டு கிராமத்தைச் சுற்றிவரச் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பவம் நடைபெற்று 11 நாள்கள் கழித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மாவட்ட கண்காணிப்பாளரிடம் முறையிட்ட பிறகே, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக இதுவரையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஐந்து பேரும் சிறுமி அடையாளம் காட்டிய பாலியல் வன்கொடுமை செய்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாலியல் வன்கொடுமை செய்த மற்றவர்களை சிறுமியால் அடையாளம் காட்ட இயலவில்லை’ என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பீகார் பெண்கள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது. காயா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செப்டம்பர் 2-ம் தேதி பெண் நல ஆணையம் முன்பு விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: