கேரளாவில் யூடியூப் பார்த்து அதன்மூலம் பள்ளி மாணவி ஒருவர் தனக்கு தானே பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவி கர்ப்பம் தொடர்பாக அவரது காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், கூட்டக்கல் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். தனது வீட்டில் அருகே வசித்துவரும் 21 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்தார். மாணவிக்கு 18 வயது பிறந்ததும் அவரை திருமணம் செய்துகொள்ள இளைஞர் திட்டமிருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை பெற்றோரிடம் மாணவி மறைத்துவிட்டார். தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மட்டும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியை 2 முறை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். எனினும், அவர் கர்ப்பமாக இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை.
இதனிடையே, பிரவச வலி வந்ததால் என்ன செய்வது என்று யோசித்த மாணவி, பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்து யூ டியூப்பில் வீடியோ பார்த்து அறிந்துகொண்டார். அதன்பின்னர், வீட்டிலேயே தனக்கு தானே அவர் பிரசவம் பார்த்துகொண்டார். அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இதனிடையே சிறுமியின் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கவே, பெற்றோர் அங்கு சென்றபோது நடந்த விவரம் தெரியவந்தது.
இதையும் படிங்க: Agni-V: அக்னி-5 ஏவுகணை- இந்தியாவின் சோதனை வெற்றி!
உடனடியாக மாணவியும், அவரது குழந்தையும் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை நலமாக இருப்பதாக கூறிய மருத்துவர்கள், மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.