Home /News /national /

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தாய்... விபரீத முடிவெடுத்த சிறுமி

காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தாய்... விபரீத முடிவெடுத்த சிறுமி

விளம்பரப் பலகையின் மீது ஏறி அடம்பிடித்த சிறுமி

விளம்பரப் பலகையின் மீது ஏறி அடம்பிடித்த சிறுமி

ஹோட்டலில் பணியாற்றும் நபரை அந்த சிறுமி காதலித்து வந்ததாகவும், இதற்கு சிறுமியின் தாய் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் விளம்பரப் பலகையின் மீது ஏறி சிறுமி ஒருவர் அடம்பிடித்த சம்பவம் அந்த்ப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்திய பிரதேசத்தில் காதலித்த நபரை திருமணம் செய்துவைக்கக் கோரி சிறுமி ஒருவர் விளம்பர பலகையின் மீது ஏறி அடம்பிடித்தார். இந்தூரில் பர்தேசிபுரா நகரில் பண்டாரி பாலம் என்ற இடம் உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி ஒருவர் சாலை மீது அமைக்கப்பட்ட உயரமான விளம்பரப் பலகையின் மீது ஏறினார்.

    ஹோட்டலில் பணியாற்றும் நபரை அந்த சிறுமி காதலித்து வந்ததாகவும், இதற்கு சிறுமியின் தாய் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க சிறுமியின் தாய் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

    Also read: மதுரையில் எய்ம்ஸ் அமைய மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மு.க. ஸ்டாலின்

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமி விளம்பர பலகை மீது ஏறி கீழே இறங்காமல் அடம்பிடித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பர்தேசிபுரா காவல்நிலைய போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட காதலர் சிறுமியை சமாதானம் செய்து வைத்ததை அடுத்து அவர் கீழே இறங்கினார்.













    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published:

    Tags: Love issue, Madhya pradesh

    அடுத்த செய்தி