Home /News /national /

400 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. வேலை வாங்கித்தருவதாக கூறி போலீஸ் உள்ளிட்டோர் மோசடி..

400 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. வேலை வாங்கித்தருவதாக கூறி போலீஸ் உள்ளிட்டோர் மோசடி..

Minor Girl Rape

Minor Girl Rape

தனக்கு நேர்ந்த அவலம் குறித்து காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது போலீசார் சிறுமியை லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி திருமணமான ஒரு மைனர் சிறுமியை 400க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் குறித்து காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது, போலீசாரும் அச்சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அச்சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

திருமணம் ஆன மைனர் சிறுமி ஒருவர் கணவர் குடும்பத்தினரின் சித்ரவதையை அனுபவிக்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் தனது எதிர்கால தேவைக்காக வேலைக்கு செல்லலாம் என முயற்சி செய்த போது அவரை ஏமாற்றி கடந்த ஆறு மாத காலத்தில் 400க்கும் மேற்பட்டோர் அவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். இது குறித்து காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது அங்கும் போலீசார் அவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நடந்தது என்ன?

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பெஜோகாய் எனும் பகுதியைச் சேர்ந்த மைனர் சிறுமியின் தந்தை தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். சிறுமியின் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தனது மகளுக்கு வரன் பார்த்து திருமணம் செய்து மனமகன் வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் சிறுமியின் தந்தை. ஒன்றரை ஆண்டுகள் தனது கணவருடன் வாழ்ந்து வந்த அச்சிறுமி ஒரு கட்டத்தில் தனது மாமனார் கொடுமை தாங்க முடியாமல் தனது தந்தையின் வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

Also read:  ரிக்‌ஷா ஓட்டுனர் குடும்பத்துக்கு தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எழுதி வைத்த பெண் - நெகிழ்ச்சி சம்பவம்

தனது எதிர்காலத்துக்காக வேலைக்கு செல்வது என முடிவெடுத்த அச்சிறுமி, அம்பெஜோகாய் டவுனுக்கு சென்று வேலை தேடி வந்தார். தனியார் வேலைவாய்ப்பு மையத்துக்கு சென்ற அச்சிறுமிக்கு அங்கு இருவர் அறிமுகம் ஆன நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை தருவதாக உறுதியளித்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். அப்போது தொடங்கி கடந்த ஆறு மாதத்தில் வேலை தருவதாக ஏமாற்றி 400க்கும் மேற்பட்டோர் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.

Also read:  "நான் ஒரு டைம் ட்ராவலர், 2027ல் இருக்கிறேன்.. நான் தான் எதிர்கால பூமியின் கடைசி மனிதன்".. TikToker வெளியிட்ட வீடியோ!

புகார் அளிக்க சென்றபோது போலீசாரும்...

தனக்கு நேர்ந்த அவலம் குறித்து அம்பெஜோகாய் நகர காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்ற போது போலீசார் சிறுமியை லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். இதனால் மேலும் பாதிக்கப்பட்ட அச்சிறுமி இது குறித்து சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தை தொடர்ந்து கொண்டு கூறியதன் பேரில், தற்போது அம்பெஜோகாய் புறநகர் காவல்நிலையத்தில் சிறுமி புகார் அளித்ததன் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார்.

சிறுமி தற்போது 20 வார கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு கருக்கலைப்பு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

 
Published by:Arun
First published:

Tags: Minor girl, Rape

அடுத்த செய்தி