இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டு வெடிப்பு... டெல்லியில் பதற்றம்

டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. அதிஷ்டவசமாக எந்தவித உயிர் இழப்பும் ஏற்படவில்லை.

டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. அதிஷ்டவசமாக எந்தவித உயிர் இழப்பும் ஏற்படவில்லை.

 • Share this:
  டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பதற்றம் ஒருபுறம் நிலவி வர மறுபுறம் மத்திய டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் சில கார்கள் சேதமடைந்துள்ளன. உயிர்சேதம் மற்றும் பொருள் சேதங்கள் அதிகளவில் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தூதரகம் தொடர்பான இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இது ஆகும். முதலாவது சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் ஒரு விழாவிற்காக கூடியிருந்த விஜயா சவுக் பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பை கருத்தில் கொண்டு அனைத்து விமான நிலையங்கள், முக்கிய அரசு மாளிகைகள் ஆகியவற்றுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடைபாதையில் பிளாஸ்டிக் பையால் வெடிபொருள் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள அப்துல் கலாம் சாலையிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. அதிஷ்டவசமாக எந்தவித உயிர் இழப்பும் ஏற்படவில்லை. குண்டுவெடிப்பின் தன்மை மற்றும் காரணங்களை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லியின் அமைதியை குலைக்கும் எந்தவொரு முயற்சியும் தடுக்கப்படும்” என்ரு கூறியுள்ளார்.
  Published by:Ram Sankar
  First published: