மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான பரிசுப் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகையை பெறுவதற்கு நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடி சில வாசங்களுடன் கூடிய லோகோ ஒன்றை இந்த அமைச்சகத்திற்காக நீங்கள் தயார் செய்து அனுப்ப வேண்டும்.
2023ஆம் ஆண்டை, சிறுதானியன்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறுதானியங்கள் மீது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சிறுதானியங்கள் தொடர்புடைய மாபெரும் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
இந்த நிகிழ்ச்சியை வெற்றிகரமானதாக மாற்றும் வகையிலும், போட்டிக்கான பங்கேற்பாளர்களை அதிகரிக்கும் வகையிலும் இந்த அமைச்சகம் மற்றும் My Gov இணைந்து டேக்லைன் மற்றும் லோகோ போட்டியை நடத்துகின்றனர்.
Read More : 12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... ரயில்வேயில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு!
உங்கள் வாசகம் அரசால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ரூ.51,000 பரிசுத் தொகையும், உங்கள் லோகோ அரசால் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அதற்கு ரூ.50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆக, மொத்தம் நீங்கள் இரு போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் ரூ.1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை பெற முடியும். இந்தப் போட்டியில் நீங்கள் பங்கேற்க விரும்பினால் myGov.in இணையதளத்தில் லாகின் செய்து, போட்டியில் உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதை செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 20ஆம் தேதி ஆகும்.
டேக்லைன் சமர்ப்பிப்பு நடைமுறை
லோகோ சமர்ப்பிப்பு நடைமுறை
லோகோ தேர்வு நடைமுறை
டேக்லைன் போட்டியாளர்களை தேர்வு செய்வதற்கான குழு போன்று, லோகோ போட்டியாளர்களை பரிசீலனை செய்வதற்கும் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கடைப்பிடிக்கப்படும் அதே நடைமுறையில் இங்கும் பரிசு அளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central govt, Food, India