Home /News /national /

புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை எடுத்துக் கூறிய கல்வித்துறை அலங்கார ஊர்திக்கு விருது

புதிய கல்வி கொள்கையின் அம்சங்களை எடுத்துக் கூறிய கல்வித்துறை அலங்கார ஊர்திக்கு விருது

அலங்கார ஊர்தி

அலங்கார ஊர்தி

ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்திக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் கர்நாடக அலங்கார ஊர்திக்கும் மூன்றாவது இடம் மேகாலய அலங்கார ஊர்திக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    குடியரசுத் தினவிழாவின்போது நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் புதிய கல்விக்  கொள்கையின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கல்வித்துறையின் அலங்கார ஊர்திக்கு சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    குடியரசுத் தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்கள், மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அணிவகுப்பில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இதையடுத்து, டெல்லி குடியரசுத் தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெற்ற குடியர்சுத் தின அணிவகுப்பில் இடம்பெற்றது. மேலும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்திகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அமைச்சரவைக்கான பட்டியலில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை எடுத்து கூறும் வகையில் வேத ரிஷிகளின் உருவம் இடம்பெற்ற கல்வி அமைச்சகத்தின் ஊர்திக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்திக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் கர்நாடக அலங்கார ஊர்திக்கும் மூன்றாவது இடம் மேகாலய அலங்கார ஊர்திக்கு அளிக்கப்பட்டுள்ளது.

     

    கூடுதலாக, முதன்முறையாக, MyGov இயங்குதளத்தின் மூலம், சிறந்த அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் பிரபலமான தேர்வுப் பிரிவில் சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு வாக்களிக்க பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். இந்த ஆன்லைன் வாக்கெடுப்பு ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பர்தாவுக்கு போட்டியாக காவித் துண்டு: கர்நாடக கல்லூரிகளில் தொடரும் சர்ச்சை

    இதில், சிறந்த சேவைக்காக இந்திய விமானப் படை தேர்வு செய்யப்பட்டது. இந்த பிரிவில் மாநிலங்களுக்கான சிறந்த அலங்கார ஊர்திக்கு மகாராஷ்டிர அரசின் அலங்கார ஊர்தி தேர்வானது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: New Education Policy, Republic day

    அடுத்த செய்தி