மாநில அரசின் மானிய திட்டங்களுக்கும் ஆதார் பயன்படுத்தலாம்!

முத்தலாக் தடை மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது.

Web Desk | news18
Updated: July 25, 2019, 9:12 AM IST
மாநில அரசின் மானிய திட்டங்களுக்கும் ஆதார் பயன்படுத்தலாம்!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: July 25, 2019, 9:12 AM IST
ஆதார் எண்ணை மாநில அரசுகளின் மானியத் திட்டங்களுக்கும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டமும் நேற்று நடைபெற்றது.

இதில், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலையை சர்க்கரை ஆலைகளை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, விவசாயப் பொருட்கள் செலவு மற்றும் விலைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், கடந்த ஆண்டின் விலையையே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யவும், 40 லட்சம் டன் அளவுக்கு சர்க்கரையை சேமித்து வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1,674 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை மாநில அரசுகளின் மானியத் திட்டங்களுக்கும் பயன்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதார் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது, மத்திய அரசின் 439 திட்டங்களுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. 128 கோடி பேர் ஆதார் எண்ணை வைத்துள்ள நிலையில், மாநில அரசுகளும் ஆதாரைப் பயன்படுத்துவதன் மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Loading...

இந்நிலையில், முத்தலாக் தடுப்பு மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முத்தலாக் முறையில் விவகாரத்து வழங்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு சிறை தண்டனை வழங்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், இந்த மசோதாவை நிறைவேற்றும் வகையில், பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான போக்சோ சட்டத்திருத்தம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான குறைந்தபட்ச தண்டனை, 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.

நாடு முழுவதும் 128 கோடி மக்கள் ஆதார் கார்டுகளை வைத்துள்ளனர். தற்போது மாநில அரசுகளின் மானியங்களைப் பெறவும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று திருத்தங்களை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முறைகேடுகளைத் தடுக்க முடியும், தகுதிவாய்ந்த மக்கள் பலன் அடைவார்கள் என்று எதிபார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க... சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த ஆந்திர முதல்வர் ஜெகன்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...