Home /News /national /

விமான நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல்

விமான நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பு அடிப்படையில் 6 விமான நிலையங்களின் பராமரிப்புகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
ஜெய்ப்பூர், அகமதாபாத் உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களின் பராமரிப்பு நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பு அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 996 நிறுவனங்களில் 6 கோடியே 50 லட்சம் எதிரி பங்குகளை விற்பனை செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபிறகு, பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்கள் இந்தப் பங்குகளை வைத்திருந்தனர். சுமார் 20,323 பேரின் இந்தப் பங்குகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவசரகால தேவைக்காக கர்நாடக மாநிலத்தின் பதூர் பகுதியில் உள்ள பெட்ரோலிய கிடங்கில் ஒரு கோடியே 90 லட்சம் பேரல் பெட்ரோலியத்தை சேமித்துவைக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. சர்வதேச அளவில் பெட்ரோலிய விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், விநியோகம் மற்றும் விலை அபாயங்களை எதிர்கொள்ள இது உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுத்துறை மற்றும் அரசு கூட்டாக மேற்கொள்ளும் இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் அடுத்த சில மாதங்களில் கோரப்பட உள்ளன. இந்திய டிரெட்ஜிங் கழக நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் பங்குகளை முழுவதுமாக விற்பனை செய்வதற்கு கொள்கை அளவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cabinet

அடுத்த செய்தி