முகப்பு /செய்தி /இந்தியா / பாஜகவிலிருந்து விலகிய அமைச்சர்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதியில் இணைந்தனர்!

பாஜகவிலிருந்து விலகிய அமைச்சர்கள் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதியில் இணைந்தனர்!

UP Polls: பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக கருதப்படும் மவுரியா, ஏற்கெனவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

UP Polls: பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக கருதப்படும் மவுரியா, ஏற்கெனவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

UP Polls: பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக கருதப்படும் மவுரியா, ஏற்கெனவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விலகிய சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகியோர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இன்று இணைந்தனர்

உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருவதால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 125 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Also read:  கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் விடுவிப்பு.. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் பாஜக-வை விட்டு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் விலகி வருகின்றனர். நேற்றைய தினம், உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாக அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் எம்எல்ஏக்கள் முகேஷ் வர்மா மற்றும் வினய் ஷாக்யா ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளளனர்.

கடந்த இரண்டு நாள்களில் பதவி விலகும் மூன்றாவது அமைச்சர் தரம் சிங் சைனி ஆவார். இது வரை 3 அமைச்சர்கள் மற்றும் 5 எம்எல்ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் தேவைகளை யோகி ஆதித்யநாத் அரசு பூர்த்தி செய்யவில்லை என்பது பதவி விலகுபவர்களின் முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்றாக உள்ளது. இதனிடையே, பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக கருதப்படும் மவுரியா, ஏற்கெனவே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி ஆகியோர் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியில் இணைந்தனர். இவர்களுடன், எம்எல்ஏக்களாக இருக்கும் பகவதி சாஹர், வினய் சாக்யா, ரோஷன் லால்வர்மா, முகேஷ் வர்மா, பிரஜேஷ் குமார் பிரஜாபதி ஆகியோரும் இன்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதிக் கட்சியி்ல் இணைந்தனர்.

பதவி விலகல்கள் ஒரு புறம் இருந்தாலும், 172 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்து விட்டதாக பாஜகவின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உன்னாவ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண்ணின் தாயை வேட்பாளராக்கிய காங்கிரஸ்!

First published:

Tags: BJP, Uttar pradesh