கேரளாவில் வெள்ளம்: சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் மாற்றித்தர சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவு

கேரளாவில் வெள்ளம்: சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் மாற்றித்தர சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவு
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
  • News18
  • Last Updated: August 13, 2018, 4:27 PM IST
  • Share this:
கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்கள் எவ்வித கட்டணமும் இன்றி மாற்றித் தரப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தென் மேற்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், கேரளாவில் உள்ள வயநாடு, இடுக்கி, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

அதில் மிக முக்கியமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நம்பியிருக்கும் கேரள மக்களின் பாஸ்போர்ட்டுகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. அவ்வாறு சேதமடைந்த பாஸ்போர்களுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்  உடனடியாகவும்  இலவசமாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.


மேலும் தொலைந்து போன அல்லது சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்க வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்று சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் மையங்களை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

First published: August 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading