அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்கு: மத்திய அமைச்சர் கண்டனம்!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்கு: மத்திய அமைச்சர் கண்டனம்!

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர், கேரள ஐடி துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரின் தொடர்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Share this:
தங்கக் கடத்தல் வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருக்கும் அமலாக்கத்துறையினர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அவர்களுக்கு எது இடையூராக இருக்கிறது என்பதை எடுத்துரைப்பதாக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். கேரளாவில் தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்திருக்கும் அனுராக் இதனை தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் தங்கக் கடந்தல் விவகாரம் கடந்த ஆண்டு கேரள அரசியலை ஆட்டிப்படைத்தது. கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ₹14.82 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் துபாயில் இருந்து கேரளாவில் உள்ள துபாய் தூதரக அதிகாரி ஒருவரின் பெயரில் கொண்டுவரப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் சிவசங்கர், கேரள ஐடி துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோரின் தொடர்பு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய விசாரணை முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சுவப்னா சுரேஷை முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க நிர்பந்தித்தனர் எனக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் தேர்தல் பரப்புரைக்காக வந்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள போலீசாரின் செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்வதன் மூலம் அவர்கள் நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றால், தங்கக் கடத்தல் விவகாரம் அவர்களுக்கு எவ்வளவு தொந்தரவாக இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இந்த செயல்பாடு அவர்களின் பயத்தை காட்டுகிறது. ஊழல் தான் இடதுசாரி அரசின் தனிச்சிறப்பு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: