ஹோம் /நியூஸ் /இந்தியா /

''இதுதான் சான்ஸ்''.. மேடையில் ஏறி டான்ஸ் ஆடிய அமைச்சர் ரோஜா.. ஆச்சரியப்பட்ட மாணவிகள்!

''இதுதான் சான்ஸ்''.. மேடையில் ஏறி டான்ஸ் ஆடிய அமைச்சர் ரோஜா.. ஆச்சரியப்பட்ட மாணவிகள்!

நடிகை ரோஜா டான்ஸ்

நடிகை ரோஜா டான்ஸ்

Roja dance | கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கிறேன் என ரோஜா பேச்சு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Tirupati

  திருப்பதியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் நடிகையும் அமைச்சருமான ரோஜா, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.

  தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர்.

  ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசில், நடிகை ரோஜா சுற்றுலா மற்றும் கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார்.

  ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலை அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பவர் முன்னாள் நடிகை ரோஜா. சுற்றுலா, கலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் ஆந்திர மாநில அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

  இந்த நிலையில் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்ட ரோஜா மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

  தொடர்ந்து பேசிய அவர், குழந்தையாக இருந்த போது அமைதியாக இருந்தேன். அப்போது இது போன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. இப்போது கிடைத்துள்ளது.எனவே வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறேன் என்று கூறினார்.

  இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Actress Roja, YSR Congress