கொலை முயற்சி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் விசாரணைக் காவலில் அடைப்பு!

புகாரின் அடிப்படையில் பிரபால் படேல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட விசாரணை நடந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

news18
Updated: June 21, 2019, 3:12 PM IST
கொலை முயற்சி வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் விசாரணைக் காவலில் அடைப்பு!
மத்திய அமைச்சர் பிரஹ்லாத் படேல் மற்றும் மகன்
news18
Updated: June 21, 2019, 3:12 PM IST
மத்திய அமைச்சர் பிரஹலாத் படேலின் 26 வயது மகன் பிரபால் படேல், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாமோ தொகுதி பாஜக எம்.பியாக உள்ள பிரஹலாத் படேல், தனிப்பொறுப்புடன் கூடிய சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். இவரது மகன் பிரபால் படேல் உள்ளிட்ட 7 பேர் கடந்த திங்கள் இரவு நடந்த அடிதடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபால் படேலுக்கு ஒருநாள் விசாரணைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற 6 பேர் ஜுலை 1 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

திங்கன்று இரவு ஹிமான்சு ரதோர் மற்றும் ராகுல் ராஜ்புத் ஆகியோர் திருமண வீட்டில் இருந்து திரும்பி வரும் போது, பிரபால் படேல் உள்ளிட்ட 6 பேர் அவர்களை வழிமறித்து சண்டையிட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபால் படேலின் சகோதரரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான ஜலம் சிங் படேலின் மகன் மோனு படேல், தன்னுடைய அலுவலகத்துக்கு ஹிமான்சு மற்றும் ராகுலை அழைத்துச் சென்று கொலைவெறியுடன் தாக்கிதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் பிரபால் படேல் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட விசாரணை நடந்துவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published: June 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...