முகப்பு /செய்தி /இந்தியா / "அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!

"அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!

அதானி - நிர்மலா சீதாராமன்

அதானி - நிர்மலா சீதாராமன்

adani debt details | அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன் விவரங்கள் குறித்து, மக்களவை உறுப்பினர் தீபக் பாய்ஜ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதானி குழுமத்திற்கு வங்கிகள் வழங்கியுள்ள கடன் விவரங்கள் குறித்து, மக்களவை உறுப்பினர் தீபக் பாய்ஜ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான், ரிசர்வ் வங்கி சட்டத்தின் படி, எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது என்று கூறினார். எனவே, அதானி குழுமத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பறி கொடுத்தவர் பக்கம் இல்லாமல், பறித்தவர் பக்கம் இருக்குமானால் சட்டத்தை மாற்றுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். தங்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் சேமிப்பு என்னவாகும் என்று பொதுமக்கள் பதறும் போது, சட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒளிந்து கொள்வதாக சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை குறித்தே சட்ட திருத்தம் வரும் போது, மக்கள் பணத்தை அறிந்து கொள்ளும் உரிமைக்கு குறுக்கே சட்டம் இருந்தால், அதை திருத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிடுமாறும் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: Adani, Loan, Minister Nirmala Seetharaman, Nirmala Seetharaman