முகப்பு /செய்தி /இந்தியா / ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

24 மணிநேரமும் செயல்படும் ஆப்கானிஸ்தான் சிறப்பு மையம் அமைக்கப் பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை நிலவுவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதே மத்திய அரசின் முதன்மை நோக்கம் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி, காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டோர் குறித்த தகவல்களை வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்லா எடுத்துரைத்தார்.

இதனைதொடர்ந்து ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் முன்னுரிமைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி முதலாவதாக இந்தியர்களை அங்கிருந்து மீட்பது, அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

துயரத்தில் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிகள் புரிய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இவைதவிர 24 மணிநேரமும் செயல்படும் ஆப்கானிஸ்தான் சிறப்பு மையம் அமைக்கப் பட்டிருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக மின்னணு விசா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 565 பேர் அந்நாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள வெளியுறவு அமைச்சகம், இதில் ஆப்கன் குடியுரிமை பெற்ற 112 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. காபூல் விமான நிலைய பகுதிகளில் அதிகளவு துப்பாக்கிச்சூடு நடப்பதால், மீட்புப் பணிகள் மிகவும் சவாலாக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Must Read : காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: 10க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

காபூலில் மிகவும் நெருக்கடியான சூழல் இருப்பதால், விமானங்களை தரையிறக்குவதில் போதிய ஒத்துழைப்பு இல்லை எனவும் ஜெய்சங்கர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு இந்தியா அடைக்கலம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

First published:

Tags: Afghanistan, External Minister jaishankar