இஸ்லாமிய எம்.எல்.ஏவை ’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க அமைச்சர்!

மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

news18
Updated: July 27, 2019, 11:12 PM IST
இஸ்லாமிய எம்.எல்.ஏவை ’ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்திய பா.ஜ.க அமைச்சர்!
சி.பி.சிங்
news18
Updated: July 27, 2019, 11:12 PM IST
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிஸ் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏவை பா.ஜ.க அமைச்சர் ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அமைச்சரின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கும்பல் தாக்குதல் அதிகரித்துவருகிறது. மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமியர்களை, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்கிய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

இந்தநிலையில், பா.ஜ.க அமைச்சர் ஒருவர் அத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி, வீட்டு வசதித்துறை அமைசர் சி.பி.சிங், அம்மாநில சட்டப்பேரவை வளாகத்தில் வைத்து காங்கிரஸைச் சேர்ந்த இஸ்லாமிய எம்.எல்.ஏ இர்பான் அன்சாரியை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


அந்த வீடியோவில் அன்சாரியை தோளில் இறுக்கமாகப் பிடித்து பேசும் சி.பி.சிங், ‘இர்பான் பாய், ஜெய் ஸ்ரீராம் என்று சத்தமாகச் சொல்லுங்கள். உங்களுடைய முன்னோர்கள் ராமரின் வழி வந்தவர்கள். பாபரின் வழி வந்தவர்கள் அல்ல. நான், உங்களை பயமுறுத்தவில்லை. உங்கள் முன்னோர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டவர்கள் என்பதை மறவாதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய செயல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அவருடைய செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

Also see:

Loading...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...