ஹோம் /நியூஸ் /இந்தியா /

Covshield : கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இடைவெளி சர்ச்சை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்

Covshield : கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் இடைவெளி சர்ச்சை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம்

ஹர்ஷ் வர்தன்

ஹர்ஷ் வர்தன்

கொரோனா தடுப்பூசி போன்ற முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது துரதிர்ஷ்டவசமானது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோசுக்குமான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களில் இருந்து 12 வாரம் முதல் 16 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. இரண்டாவது டோஸ் 12 முதல் 16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசிக்கான நெறிமுறை மாற்றப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும், கோவிஷீல்டு தடுப்பூசியின் இடைவெளியை குறைப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. இதனால் கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களுக்கு 2ஆவது டோஸ் செலுத்துவதில் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளி குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்குமான இடைவெளியை அதிகரிப்பது குறித்த முடிவு, அறிவியல்பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் எடுக்கப்பட்டது என்று தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா விளக்கம் அளித்திருந்தார்.

Must Read : கோவிட்-19 தடுப்பூசி பக்கவிளைவுகள் சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருப்பதற்கு என்ன காரணம்?

இது குறித்த அறிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் முடிவை வெளிப்படையாகவும் அறிவியல்பூர்வ தரவுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். தரவை மதிப்பீடு செய்வதற்கு இந்தியா வலுவான பொறிமுறையைக் கொண்டுள்ளது என்றும், இதுபோன்ற முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

First published:

Tags: Central minister Harsh Vardhan, Corona Vaccine, Covid-19 vaccine, Covishield