விதிகளை மீறியதால் தடுத்த அதிகாரி... ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர்...!

Lok Sabha Elections 2019 | அனுமதிக்கப்பட்ட வாகனங்களைக் காட்டிலும் அதிக வாகனங்களில் அமைச்சர் சென்றதாகக் கூறப்படுகிறது.

விதிகளை மீறியதால் தடுத்த அதிகாரி... ஆத்திரமடைந்த மத்திய அமைச்சர்...!
அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த அமைச்சர்
  • News18
  • Last Updated: March 31, 2019, 1:44 PM IST
  • Share this:
பீகாரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக காரை தடுத்ததால் ஆத்திரம் அடைந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, தேர்தல் அதிகாரியை தாக்க முயன்றார்.

பீகார் மாநிலம் பக்சரில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே பரப்புரை செய்தார். அப்போது அனுமதிக்கப்பட்ட வாகனங்களைக் காட்டிலும் அதிக வாகனங்களில் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதை தேர்தல் அதிகாரியான உபத்யாய் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வினி குமார் சவ்பே, உபத்யாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பின்பற்றியாக வேண்டும் என அதிகாரி கூறியதால், அதை பின்பற்ற முடியாத என மறுத்த அஸ்வினி குமார் சவ்பே, தன்னைக் கைது செய்து கொள்ளுங்கள் என தடாலடியாக பேசினார்.

 

Read Also...
First published: March 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்