• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தான் காரை ஓட்டிவந்தார்.. காயமடைந்த விவசாயி குற்றச்சாட்டு!

அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் தான் காரை ஓட்டிவந்தார்.. காயமடைந்த விவசாயி குற்றச்சாட்டு!

உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தான் காரை ஓட்டிச் சென்றதாக காயமடைந்த விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் பாதுகாப்புக்கு வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, பதற்றத்தை குறைக்க லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகள் குகுடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையும் வழங்குவதாக அம்மாநில அரசு உறுதி அளித்துள்ளது.



    இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த விவசாயி தேஜிந்தர் விர்க் கூறுகையில், 72 மணி நேரங்கள் கடந்த பிறகும், ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. மத்திய அமைச்சரின் வருகைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், எங்களைக் கொல்ல சதி நடந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தே, அவரது வருகையின் போது போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    தொடர்ந்து, அமைச்சர் வரும் பாதை மாறிவிட்டது என்று எங்களுக்கு மாலை 3 மணியளவில் கூறப்பட்டது. இதையடுத்து, நாங்கள் அமைதியாக திரும்பிச் செல்ல ஆரம்பித்தோம். அப்போது, 100 கிமீ வேகத்தில் திடீரென எங்கள் பின்னால் வேகமாக வந்த கார்கள் எங்கள் மீது வேண்டுமென்றே மோடியது. அந்த காரில் அஜய் மிஸ்ராவின் மகன் மற்றும் அவரது ஆட்கள் இருந்தனர். இந்த மோதலில் பலத்த காயமடைந்த நான் சுயநினைவை இழந்தேன்.

    மேலும், கார் மோதியதால் சிதறிய கூட்டம், பின்னர் அவர்கள் பாதுகாப்புக்கு வந்த கார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது, போராட்டக்கார்கள் சிலரை காப்பாற்றி போலீசில் ஒப்படைத்தனர் என்றார்.

    தொடர்ந்து, மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், காரை ஓட்டியது அமைச்சரின் மகன் என்பதற்கு நான் சாட்சியமளிக்க தயாராக இருக்கிறேன் என்றார். மேலும், யோகி ஆதித்யநாத் அரசு தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: