கோலாகலமாக நடந்து முடிந்த புரி ஜெகன்நாகதர் கோயில் திருவிழா!

தேர்த்திருவிழாவை காண ஒடிசா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.

கோலாகலமாக நடந்து முடிந்த புரி ஜெகன்நாகதர் கோயில் திருவிழா!
புரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா
  • News18
  • Last Updated: July 13, 2019, 8:34 AM IST
  • Share this:
ஒடிசாவில் நடைபெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.

ஒடிசா மாநிலத்தின் கடற்கரையோரப் பகுதியான புரியில் கடந்த 12-ம் நூற்றாண்டில் வைணவத் தலமான ஜெகன்நாதர் ஆலயம் கட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும் ரத யாத்திரை, கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோருக்கு தனித்தனியாக கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட மரத்தேர்களில், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.


தேர்த்திருவிழாவை காண ஒடிசா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.

ஜெகன்நாதர் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க வந்த ஏராளமான பக்தர்கள், தேர்களைச் சுற்றி தனித்தனி குழுக்களாக பிரிந்து வாத்தியங்களை இசைத்தும், ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா கோஷங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரதநாட்டிய கலைஞர்களும் தேர்களின் முன்பு விதவிதமான நடனங்களை அரங்கேற்றினர். இதேபோல், நாட்டுப்புற கலைஞர்களும் தங்களது பல்வேறு அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தினர்.புரி நகரில் கடும் வெயில் கொளுத்தியதால், வயதான பக்தர்கள் பலர் சோர்வடைந்தனர். இதையடுத்து, பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

இதனிடையே, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான புரி ஜெகன்னாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருளி, நகரை வலம் வந்தனர்.

கண்டிச்சா ஆலயத்தில் ரத யாத்திரை நிறைவடைந்ததை அடுத்து, 9 நாட்களுக்குப் பிறகு 3 உற்சவர்களும் ஜெகன்நாதர் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Also see...

First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading