பெட்ரோல், டீசல், சிலிண்டரை அடுத்து பால் விலையும் உயர்கிறது லிட்டருக்கு ரூ.12 உயர்வு?
பெட்ரோல், டீசல், சிலிண்டரை அடுத்து பால் விலையும் உயர்கிறது லிட்டருக்கு ரூ.12 உயர்வு?
பால் விலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்லாமல் தீவன பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது எனவே பால் விலையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய பிரதேசத்தின் ரத்லம் அருகே வரும் மார்ச் 1ம் தேதி முதல் பால் விலை லிட்டருக்கு 12 ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை சமீப நாட்களாக விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. வரலாற்று விலை உயர்வை சந்தித்திருக்கும் பெட்ரோல், டீசல் விலை இன்னும் சில தினங்களில் செஞ்சுடி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளை கடந்து பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் எதிரொலி சாமாணிய மக்களின் வீட்டு பட்ஜெட்டை பதம் பார்த்து வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் காய்கறி போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக மத்திய பிரதேசத்தின் ரத்லம் அருகே 25 கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் அங்குள்ள ராமர் கோவிலில் கூட்டம் ஒன்றை கடந்த செவ்வாய் கிழமையன்று நடத்தியுள்ளனர். அக்கூட்டத்தில் பேசிய பால் உற்பத்தியாளர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து செலவு கடுமையாக அதிகரித்துள்ளது எனவே பால் விலையை வரும் மார்ச் 1ம் தேதி முதல் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்லாமல் தீவன பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது எனவே பால் விலையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் என்ற அளவிலேயே உயர்த்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கொரோனா காலத்தில் பால் விலை ஏற்றப்படாததால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறினர்.
ரத்லம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹிராலால் சவுத்ரி கூறுகையில், 25 கிராமங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நடத்திய கூட்டத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பால் விலையை உயர்த்த முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போது தீவன விலை உயர்வு, அத்துடன் டீசல், பெட்ரோல் விலையும் உயர்ந்து விட்டது. ஒரு எருமை மாட்டினை 1 முதல் 1.50 லட்ச ரூபாய் விலைக்கு வாங்குகிறோம். ஒரு லிட்டர் பாலின் விலை தற்போது 43 ரூபாயாக விற்கப்படுகிறது, இதன் விலையை இனி லிட்டருக்கு 55 ரூபாயாக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. எங்கள் விலை ஏற்றத்தை நகரில் உள்ள பால் முகவர்கள் ஏற்றுக்கொள்கிறாகளா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டி உள்ளது என தெரிவித்தார்.
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.