Home /News /national /

வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்.. அப்படித்தானே? : பிரபல நடிகரின் மனைவி சாட்டையடி

வடகிழக்கு மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள்.. அப்படித்தானே? : பிரபல நடிகரின் மனைவி சாட்டையடி

நடிகர் மிலிந்த் சோமன் மனைவி அங்கிதா கொன்வர்.

நடிகர் மிலிந்த் சோமன் மனைவி அங்கிதா கொன்வர்.

வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள் மற்றபடி அவர்கள் யாரோ என்ற இந்திய மனநிலையை சாடியுள்ளார் பிரபல நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா.

    மகளிருக்கான 49 கிலோ பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நாடு முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்படப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து விறகு சுமந்து வாழ்க்கையை நடத்தி வந்தவர்.

    இன்று நாட்டுக்கே பெருமை சேர்த்த வெள்ளி மங்கையானார்.

    இந்நிலையில் பிரபல நடிகரான மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே அவர்கள் இந்தியர்களாகப் பார்க்கப்படுகிறார்கள் என்று தனது வலைத்தளப்பக்கத்தில் சாடியுள்ளார்.



    உங்கள் வாசிப்புக்கு: குட்டி மீராபாய் சானு: இன்ஸ்பிரேஷன்னா இதுதான் - சானுவை அசத்திய சிறுமியின் வைரல் வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Also Read: டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் போய் விட்டார் கோலி : கிண்டலடித்த இங்கிலாந்து ரசிகர் குழு பார்மி ஆர்மி

    இது தொடர்பாக அங்கிதா கூறியிருப்பதாவது:

    ”நீங்கள் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரென்றால், நாட்டுக்காகப் பதக்கம் வென்றால் மட்டுமே நீங்கள் இந்தியராக முடியும். இல்லையென்றால் நம்மை ‘சிங்கி’, ‘சைனீஸ்’, ‘நேபாளி’ என்றும் சமீபத்திய பெயரான ‘கொரோனா’ என்றும் அழைப்பார்கள். இந்தியா சாதி வெறியில் மட்டும் மூழ்கியிருக்கவில்லை. மாறாக இனவெறியிலும் மூழ்கியுள்ளது. என்னுடைய அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன், எல்லாம் வேஷதாரிகள்”

    Also Read: Tokyo Olympics Mirabai Chanu| மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார், இதயங்களையும் வென்றார்!

    இவ்வாறு அங்கிதா குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த விமர்சனத்தைப் பாராட்டி பலரும் எதிர்ப்புக் காட்டி சிலரும் அவருக்குப் பதிலளித்து வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cinema, Movie, Tokyo Olympics

    அடுத்த செய்தி