முகப்பு /செய்தி /இந்தியா / சென்னையை தொடர்ந்து வட மாநிலங்களிலும் நில அதிர்வு... பீதியில் மக்கள்!

சென்னையை தொடர்ந்து வட மாநிலங்களிலும் நில அதிர்வு... பீதியில் மக்கள்!

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்

உத்தரகண்ட், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

தலைநகர் டெல்லியில் இன்று மத்தியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.4 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக நில அதிர்வுகள் உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தை தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி, இன்று பிப்ரவரி 22ஆம் தேதி நண்பகல் 1.30 மணியளவில் உத்தரகாண்டின் பித்தோகர் பகுதிக்கு கிழக்கே 143 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 29.56 மற்றும் தீர்க்கரேகை: 81.70, என்று குறிப்பிட்டுள்ளது.  தலைநகர் சென்னையில் இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Delhi, Earthquake, Uttarkhand