Home /News /national /

புலம்பெயர் தொழிலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.. காஷ்மீரில் தொடரும் சோகம்

புலம்பெயர் தொழிலாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை.. காஷ்மீரில் தொடரும் சோகம்

ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை

ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர செயலை பயங்கரவாதிகள் நள்ளிரவு வேளையில் நடத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூறியதாவது, ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த முகமது அம்ரிஸ் என்பவரை பயங்கரவாதிகள் கைது செய்துள்ளனர். நள்ளிரவு 12.20 மணி அளவில் உயிரிழந்த நபர் தனது சகோதரருடன் தூங்கிக்கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் இவர்களின் வசிப்பிடத்திற்குள் நுழைந்துள்ளனர்.

    உயிரிழந்த முகமது அம்ரீஸ் கழிப்பறைக்கு சென்ற நிலையில், அங்கு அவரை சூழ்ந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதன் காரணமாக ரத்த வெள்ளத்தில் முகமது வீழ்ந்து கிடந்த நிலையில், பாதுகாப்பு படையினர் அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது. அங்குள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த லக்ஷ்மணன் என்ற வீரரும் அடக்கம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரு பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில், இவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் கூறப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாதிகள் புலம் பெயர் தொழிலாளர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி கொல்வதாக கூறப்படுகிறது. பீகாரைச் சேர்ந்த முகமது மும்தாஸ் புல்வாமாவில் ஆகஸ்ட் 4ஆம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதையும் படிங்க: மிருகங்களால் கூட உண்ண முடியாத உணவு.. கதறி அழுத போலீஸ் -வைரலான வீடியோ

    ஜூன் 2ஆம் தேதி அன்று பீகாரைச் சேர்ந்த தில்குஷ் குமார், அதே ஜூன் 2ஆம் தேதி ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் குமார், கடந்தாண்டு அக்டோபர் 17ஆம் தேதி பீகாரைச் சேர்ந்த அர்பிந்த் குமார் ஆகியோர் பயங்கரவாதிகளால் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Jammu and Kashmir, Migrant workers, Militant in Kashmir

    அடுத்த செய்தி