மனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி

மனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி
சைக்கிளில் சொந்த மாநிலத்துக்குப் புறப்பட்ட தொழிலாளி.
  • Share this:
கர்நாடகத்தில் இருந்து ஒடிசாவுக்குச் செல்ல சைக்கிள் வாங்க பணமின்றி, புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மனைவியின் தாலியை விற்று இருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சந்தன் ஜனா என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர் தப்பன் ஜனாவுடன் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்துள்ளார். பொது முடக்கத்தால் கடந்த 2 மாதங்களாக வருவாய் இழந்து தவித்த சந்தன், ஊருக்கு எப்படியேனும் செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், தனது மனைவியின் தாலியை விற்று சைக்கிள் வாங்கிக்கொண்டு, தனது மாநிலமான ஒடிசாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி 3 பேரும் 2 சைக்கிளில் சொந்த ஊரான பதரக் மாவட்டத்திற்கு பயணம் செய்தனர். இது குறித்து தன்னார்வலர்கள் தகவல் அறிந்து 3 பேருக்கும் உணவளித்தனர்.

Also see:
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading