மிக்-21 பைசன் ரக விமானம் கீழே விழுந்து நொருங்கி விபத்து!

மிக்-21 பைசன்

இந்த ஆண்டு 4வது முறையாக பைசன் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.

  • Share this:
இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் கீழே விழுந்து மோதி விபத்துக்குள்ளானது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.. இதனிடையே பயிற்சியில் ஈடுபட்டிருந்த பைசன் விமானத்தில் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது.

Also Read:  பாம்புகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட முயன்றவருக்கு நேர்ந்த சோகம் – வீடியோ!

இதனை சரிசெய்ய முயன்று தோல்வியடைண்ட்த விமானி, பாதுகாப்பாக எஜக்ட் செய்து விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் பிழைத்தார். இதன் பின்னர் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

பார்மரில் இருந்து சுமார் 35 கிமீ தூரத்தில் உள்ள மடாசர் கிராமத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்து சென்றனர். உள்ளூர்வாசிகளும் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர்.இந்த விபத்து மனித தவறால் நடந்ததா அல்லது இயந்திர கோள்ளாரால் நடைபெற்றதா என்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read:   தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வை 9 ஆண்டுக்கு பிறகு நினைவுகூர்ந்த மலாலா!

இந்த ஆண்டு 4வது முறையாக பைசன் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. முன்னதாக கடந்த மார்ச்சில் மூத்த விமானப் படை அதிகாரி இயக்கிய பைசன் விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல மே மாதம் பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் பைசன் விமானம் விபத்துக்குள்ளனதில் விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜனவரி மாதம் ராஜஸ்தானின் சுரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உயிர் பிழைத்தார்.

 
Published by:Arun
First published: