மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவைப் புறக்கணிக்கும் மம்தா, பினராயி விஜயன்!

மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் பா.ஜ.க கூறும் செய்திகளைப் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறானது.

news18
Updated: May 29, 2019, 6:06 PM IST
மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவைப் புறக்கணிக்கும் மம்தா, பினராயி விஜயன்!
மம்தா பானர்ஜி
news18
Updated: May 29, 2019, 6:06 PM IST
மோடி, பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கபோவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெறும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. பா.ஜ.க கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனையடுத்து, மே 30-ம் தேதி மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் பதவியேற்கு விழா நடைபெறவுள்ளது. அதற்காக, அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ரஜினி, கமல்ஹாசனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.மோடி, பிரதமாக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பேன் என்று நேற்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில் இன்று, இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளள மோடி, ‘வாழ்த்துகள்.. புதிய பிரதமர் மோடி. மோடி, பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு முடிவு செய்திருந்தேன். இருந்தாலும், கடைசி ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் பா.ஜ.க கூறும் செய்திகளைப் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறானது. மேற்குவங்கத்தில் எந்த அரசியல் படுகொலைகளும் நடைபெறவில்லை. தனிப்பட்ட வெறுப்பு, குடும்ப பிரச்னைகளின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்னையால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம். அரசியலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால், மன்னியுங்கள் மோடி.. இந்த விவகாரம் பதவியேற்பு விழாவில் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த பிரதமர் பதவியேற்பு விழா என்பது ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. எந்த அரசியல்கட்சியாலும் யாருடைய நன்மதிப்பு பாதிக்கப்பட்டாலும் அது மற்றொரு அரசியல் கட்சி ஆதாயம் பெறுவதற்கு உதவும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியாகி சிறிது நேரத்தில், மோடி பதவியேற்பு விழாவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவில்லை என்று கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர் பங்கேற்காததற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

Also see:

Loading...

First published: May 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...