குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்த மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா..!- குவியும் பாராட்டுகள்

செய்தி இணையதள ஆசிரியரான பென் ஸ்மித் சத்யா நாதெல்லா உடன் நடந்த நேர்காணல் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை விமர்சித்த மைக்ரோசாஃப்ட் சத்யா நாதெல்லா..!- குவியும் பாராட்டுகள்
சத்யா நாதெல்லா
  • News18
  • Last Updated: January 14, 2020, 4:26 PM IST
  • Share this:
மைக்ரோசாஃப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா குடியுரிமைச் சட்டம் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததற்கு CAA எதிர்பாளர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் பிறந்த சத்யா நாதெல்லா இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட்-ன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். BuzzfeedNews என்னும் செய்தி இணையதள ஆசிரியரான பென் ஸ்மித் சத்யா நாதெல்லா உடன் நடந்த நேர்காணல் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

பென் ஸ்மித் சத்யா நாதெல்லாவிடம் குடியுரிமைச் சட்டம் குறித்து கேட்ட போது, “தற்போது நடப்பவை எனக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. மிகவும் மோசமானதும் கூட. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் நாளை இந்தியாவில் மற்றொரு யுனிகார்ன் நிறுவனத்தை உருவாக்கலாம் அல்லது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகப் பதவி ஏற்கலாம்” எனக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.


சத்யா நாதெல்லாவின் கருத்து வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்கள் எங்கும் அவருக்குப் பாராட்டுகள் குவியத் தொடங்கின. வரலாற்று ஆய்வாளரும் சமீபத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டவருமான ராமச்சந்திர குஹா சத்யா நாதெல்லாவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் ரொமான்டிக் நடனம் ஆடிய ஹர்பஜன் சிங்..!- வீடியோ
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading