வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

மழை சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

மழை சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு தொடர்ந்து வருகிறது.

வடமாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வடமாநிலங்களின் பல பகுதிகளில் கனமழை வெள்ளத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் மிக கனமழை முதல் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தீவிர கனமழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசத்திலும், மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் தீவிர கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குஜராத்திலிருந்து குமரி வரை ஆறு மாநிலங்களில் 1,600 கிலோமீட்டருக்கு பரவியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இன்னும் பல பகுதிகளில் வெள்ள சூழல் தொடர்ந்து வருகிறது. இந்த மாநிலங்களில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் வயநாடு, ஆலப்புழா பகுதி மக்கள் கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேச மாநிலம் திவாஸ் பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் கயிறு கட்டி ஆற்றை கடந்துவருகின்றனர்.

கர்நாடகா

கர்நாடகாவின் பகல்கோட் மாவட்டம் சுர்பாலி கிராமத்தில் வெள்ள நீருக்கு நடுவில் அப்பகுதியினர் சிலர் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதே போல மற்றொரு பகுதியிலும் வெள்ள நீரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

மழை சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

Also see... மூன்றாகப் பிரியும் வேலூர் மாவட்டம்!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: