முகப்பு /செய்தி /இந்தியா / Southwest Monsoon : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறதா? : வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Southwest Monsoon : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறதா? : வானிலை ஆய்வு மையம் விளக்கம்

மழை

மழை

தென்மேற்கு பருவமழை காலம் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் முன்கூட்டியே, வரும் 21 ஆம் தேதி தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுருந்த நீண்டகால வானிலை முன்னறிவிப்பில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வரும் 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவமழை காலம் முன்கூட்டியே வரும் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மத்தியகிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் மத்திய கிழக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி மட்டுமே நிலவுவதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாகவும், அதிக பட்சமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இதனால் தமிழகத்திற்கு பெரிய தாக்கம் மற்றும் பாதிப்பு அல்லது மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Must Read :  சென்னையில் ஒரேநாளில் 5,428 வாகனங்கள் பறிமுதல்: கடுமையாகும் கட்டுப்பாடு!

பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Meteorological Center, Southwest monsoon