முகப்பு /செய்தி /இந்தியா / 10 ஆண்டு பேஸ்புக் காதல்.. ஸ்வீடனில் இருந்து பறந்து வந்து இந்தியரை கரம்பிடித்த பெண்

10 ஆண்டு பேஸ்புக் காதல்.. ஸ்வீடனில் இருந்து பறந்து வந்து இந்தியரை கரம்பிடித்த பெண்

ஸ்வீடன் பெண்ணை திருமணம் செய்த இந்தியர்

ஸ்வீடன் பெண்ணை திருமணம் செய்த இந்தியர்

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணை இந்திய முறைப்படி திருமணம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

காதலுக்கு மொழி, இனம், மதம், நாடு போன்ற எல்லைகளை ஏதும் இல்லை என்பதற்கு உதாரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எட்டா பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். பிடெக் பட்டதாரியான இவர் டேராடூனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டென் லிபெர்ட் என்ற பெண்ணுக்கும் 2012ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் போன், வீடியோ கால் ஆகியவை மூலம் இருவரும் பேச தொடங்கிய நிலையில், இந்த நட்பு காதலாக மலர்ந்தது.

சுமார் 10 ஆண்டு கால காதலுக்குப் பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதற்காக கடந்தாண்டு ஸ்வீடனில் இருந்து இந்தியா வந்த கிறிஸ்டன் லிபெர்ட், தனது காதலர் பவன் குமாரை தாஜ் மஹாலில் வைத்து சந்தித்துள்ளார். அங்கு தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.

பவன் குமார் தனது வீட்டில் திருமணம் குறித்து பேசுகையில், வெளிநாட்டு பெண்ணை மணப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் சந்தோஷமே எங்கள் சந்தோஷம் என பவனின் தந்தை கீதம் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்திய முறைப்படி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஸ்வீடன் பெண் கிறிஸ்டன் புடவை அணிந்து இந்திய முறைப்படி அனைத்து திருமண சடங்குகளையும் செய்தார். ஜனவரி 27ஆம் தேதி அன்று ஜோடிகள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தம்பதியை வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கிறிஸ்டன் லிபெர்ட், இந்த திருமணம் வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்றுள்ளார். இவர்களின் திருமணம் இணையத்தில் வைரலான நிலையில், தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Facebook, Love, Love marriage, Marriage, Uttar pradesh