மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலுக்கு வாய்ப்பு... கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலுக்கு வாய்ப்பு... கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
கோப்பு படம்
  • Share this:
மத்திய அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாகக் கூடும் என்பதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்,  கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக கூறினார். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து புயலாக வலுபெறக்கூடும் எனவும், நாளை மாலை வடக்கு மஹாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை இருக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.


லட்சத்தீவுகள் மற்றும் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு, வரும் ஜுன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also read... கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்... மோடி சூளுரை




Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading