மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மூன்று சிறார்கள் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கட்கோபார் என்ற பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க வெளியே பொதுக் கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
இதை அப்பகுதியில் இருந்து மூன்று சிறார்கள் கவனித்துள்ளனர். சிறுமி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக கழிப்பறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மூவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, அதை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அத்துடன் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரப்பியுள்ளனர்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அதிர்ச்சி சம்பவம் சிறுமியின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குடும்பத்தார் கட்கோபார் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மூன்று சிறார்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், மூவரும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த இந்த அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை வரம்.. மாந்திரீக பூஜை.. இளம்பெண்ணை மனித எலும்புத் தூள் சாப்பிட வைத்த கணவன் வீட்டார்...
இந்தியாவில் பெண்களுக்கு பாதுப்பு குறைவான நகரங்களில் டெல்லிக்கு அடுத்த இரண்டாவது இடத்தை மும்பை கொண்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின்படி 2021இல் பெண்களுக்கு எதிராக 5,543 குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 20 சதவீத குற்றங்கள் பாலியல் சார்ந்த குற்றங்களாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gang rape, Minor girl, Mumbai