ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாணவிகளுக்கு கூடுதலாக இனி மாதவிடாய் விடுப்பு- கொச்சி பல்கலைக்கழகம் அறிவிப்பு !

மாணவிகளுக்கு கூடுதலாக இனி மாதவிடாய் விடுப்பு- கொச்சி பல்கலைக்கழகம் அறிவிப்பு !

மாதவிடாய் விடுப்பு

மாதவிடாய் விடுப்பு

நீண்டகாலமாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள், தங்கள் மாணவர் சங்கத்தின் மூலம் மாதவிடாய் விடுப்பிற்கு கோரிக்கைவைத்து வந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ernakulam |

பெண்கள் கருவுற்று இருக்கும் போது பேறுகால விடுப்பு வழங்குவதை போல ஜப்பான், தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, ஜாம்பியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு என்பது வழங்கப்படுகிறது. மாதம்தோறும் தங்கள் மாதவிடாய் காலத்தில் அந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் இது போன்ற ஒரு நடைமுறை கிடையாது.

இந்தியாவில் இயங்கும் ஸ்விக்கி, சோமேட்டோ, பைஜூஸ், மாத்ருபூமி எனும் மலையாள இதழ் போன்ற தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றனர். கல்வி நிறுவனங்களில் அது போன்ற ஒரு வழக்கு இருப்பதில்லை. ஆனால் விதிவிலக்காக ஒரு கேரள பள்ளி மட்டும் இயங்கி வருகிறது.

தற்போதைய எர்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துராவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில், 1912 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் ஆண்டுத் தேர்வின் போது 'பீரியட் லீவ்' எடுக்க பழைய கொச்சின் சமஸ்தானம் உத்தரவிட்டது. விடுபட்ட ஆண்டுத்தேர்வை மாணவர்கள் பின்னர் எழுதிக்கொள்ளலாம். இந்த வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால் மற்ற பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இதுவரை அப்படி ஒரு நடைமுறை கிடையாது.

நீண்டகாலமாக கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள், தங்கள் மாணவர் சங்கத்தின் மூலம் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். அதற்கு இணங்கி பல்கலைக்கழகம் 2% வருகை பதிவு தளர்வை தற்போது அறிவித்துள்ளது.

பொதுவாக பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் 75% வரை வருகை பதிவு வைத்திருந்தால் தான் அவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவர். இந்த மாத விடாய் விடுப்பு முழுமையாக வழங்கப்பட்டால் நடைமுறை சிக்கல்கள் வரும் என்பதால் 2% வருகை விலக்கு தர நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

இதனால் பிஎச்டி உட்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட பெண் மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கை பூர்த்தி ஆகியுள்ளது. இது உயர்கல்வி துறையில் எடுக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அதே வேளையில் மிகவும் தேவையான முடிவு என்று மாணவர் சங்க தலைவர் நமீதா ஜார்ஜ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பள்ளி கல்வி, உயர்கல்வி, ஊடகம் என்று அணைத்து துறைகளிலும் மாதவிடாய் விடுப்பு கொடுத்துள்ள மாநிலமாக  கேரளா மாறியுள்ளது.

First published:

Tags: Kerala, Menstrual time, University