ஹோம் /நியூஸ் /இந்தியா /

முன்பு மாதவிடாயின் போது பெண்களை சமையலறையில்கூட அனுமதிக்கமாட்டார்கள்: பினராயி விஜயன்

முன்பு மாதவிடாயின் போது பெண்களை சமையலறையில்கூட அனுமதிக்கமாட்டார்கள்: பினராயி விஜயன்

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கேரள அரசு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

  கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதனால் கேரளாவில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

  தற்போதுள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியும், ஆர் எஸ் எஸ்-ம் தேவையில்லாத குழப்பத்தை மாநிலத்தில் ஏற்படுத்தி வருகின்றன என்று பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பினராயி விஜயனும் அவரது கட்சியும் பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அவசரம் காட்டுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

  மேலும் பாஜக இரட்டை வேசம் போடுவதாகவும், இது போன்ற முற்போக்கான தீர்ப்புகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பல வருடங்களுக்கு முன்னாள் மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. சமையல் அறையில் நுழைவதுகூட அசுத்தமாக கருதப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இது மாறிவிட்டது என்றும் விஜயன் தெரிவித்தார்.

  இந்தத் தீர்ப்பை எதிர்த்து போராடும் பாஜக தான், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷானி ஷிங்கனாபூர் கோயிலில் பெண்களை அனுமதிக்க 2016-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவை அமல்படுத்தியது என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுக் காட்டினார்.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: BJP, Chief Minister Pinarayi Vijayan, Protest, RSS, Sabarimala